மாநகராட்சி என்ஜினீயர்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்சாமி பீட்டர் (வயது 59). இவர் கோவை மாநகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சில காரணங்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பால்சாமி பீட்டர் தனது சொந்த ஊரான வாசுதேவநல்லூர் பகுதிக்கு வந் தார். இந்த நிலையில் அவர், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து தென்காசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பால்சாமி பீட்டரை கைது செய்தார்.பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.