திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அழிவிடைதாங்கி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40), தொழிலாளி. இவர், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனும், மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானார்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தார். மேலும் மாணவனை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.