தமிழக செய்திகள்

தனியார் ஆஸ்பத்திரியில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது

அஸிமுல் அலியின் உறவினர் ஒருவர் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

நெல்லை,

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அசாம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் காம்ருப் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிபார் ரகுமான், இவரின் மகன் ஹபிபர் ரகுமான் (வயது 28). இவர்கள் இவரும் அசாம் மாநிலம் சர்பரி மாவட்டத்தை சேர்ந்த அன்வர் அலி மகன் அஸிமுல் அலி (22) என்பவருடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்கள்.

ஆஸ்பத்திரி

கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸிமுல் அலியின் உறவினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக நேற்று மாலையில் அஸிமுல் அலி மற்றும் ஹபிபர் ரகுமான் ஆகியோர் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர்.

பாலியல் தொல்லை

அங்கு அவர்கள் இருவரும் சேர்ந்து ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த 22 வயது பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஸிமுல் அலி, ஹபிபர் ரகுமான் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.