திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் அம்பை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (72 வயது). இவர் கடந்த 2021-ம் ஆண்டு 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் சுப்பிரமணியனை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.