ஜெஸ்லின் ராஜ்குமார் 
தமிழக செய்திகள்

மார்த்தாண்டத்தில் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமாருக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், அவருக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பாலியல் தொல்லை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்லின் ராஜ்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போக்சோ

போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜெஸ்லின் ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சுந்தரையா இன்று தீர்ப்பு வழங்கினார்.

சிறை தண்டனை

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.மேலும், அவருக்கு ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி ஜெஸ்லின் ராஜ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT