கோவை,
கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியரான ரகுநாதன் (வயது 42) பி.பி.ஏ. துறை தலைவராக பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளுக்கு தனது செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் மூலம் ஆபாச தகவல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கல்லூரி இயக்குனர் பூர்ண சந்திரன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ரகுநாதனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.