தமிழக செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளியை கைது செய்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

நெல்லையில் ஒரு தனியார் மருத்துவமனையில் உறவினருக்கு உதவியாக இருந்த பெண்ணுக்கு, ஒரு நபர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

திருநெல்வேலி,

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு:

திருநெல்வேலி மாநகரம், வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உறவினருக்கு உதவியாக பெண் ஒருவர் இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணிடம் ஒரு நபர் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்று, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

குற்றவாளியை கைது செய்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை:

இது தொடர்பாக நெல்லை மாநகர சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் தென்காசி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த பாஸ்கர் (வயது 49) என்பவரை உடனடியாக கைது செய்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்து, போலீசார் குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

SCROLL FOR NEXT