நீலகிரி,
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள ஒரு தனியார் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 10 வயதான மகள் இருக்கிறாள். இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் எஸடேட் வேலைக்கு சென்றிருந்தனர். சிறுமி வீட்டின் முன்பு உள்ள படிக்கட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அப்போது அந்த வழியாக வந்த தொழிலாளியான மிராசா (வயது 56) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததையடுத்து. அவர் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மிராசா, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.