தமிழக செய்திகள்

செய்யாறு: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - வாலிபர் கைது

மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பூபதி வேலை பார்த்து வருகிறார்.

செய்யாறு,

வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி என்ற ஷாம் (வயது 21), மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தெருவில் விளையாடி கொண்டி ருந்த 3 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் மீது இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பூபதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.