தமிழக செய்திகள்

நெல்லையில் அதிர்ச்சி ; 50 பவுன் நகையுடன் சென்ற மனைவி, மகன் மாயம்

23 நாட்களாக தேடியும் கிடைக்காததால் முகமது சாலி நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலத்திற்கு சென்றுள்ளார்.

நெல்லை,

50 பவுன் நகையுடன் சென்ற மனைவி, மகன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி மகன் மாயம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ஆறாம்பண்ணையைச் சேர்ந்தவர் முகமது சாலி ( வயது 35) . இவர் அபுதாபியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா சம்சானா ( வயது 28). இவர்களுக்கு முகமது சயான் (வயது 7) என்ற மகன் உள்ளார். முகமது சாலியின் மனைவி பாத்திமா சம்சானா அக்டோபர் 1-ந்தேதி 50 பவுன் தங்க நகைகளுடன் தனது சகோதரர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு மகனை அழைத்து சென்றுள்ளார். பின்னர், நிகழ்ச்சியை கொண்டாடிவிட்டு அக்டோபர் 6 -ந்தேதி மாலை 6 மணிக்கு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அபுதாபியில் உள்ள தனது கணவர் முகமது சாலிக்கு அழைப்பு விடுத்து ஆட்டோவில் வீட்டிற்கு செல்வதாக தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், வீட்டிற்கு செல்லாமல் இருவரும் மாயமானர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இது குறித்து அக்டோபர் 7-ந்தேதி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், மேலப்பாளையம் போலீசார் புகாரின் பேரில் மனைவி மற்றும் மகனை தேடி வருகின்றனர். 23 நாட்களாக தேடியும் கிடைக்காததால் முகமது சாலி நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலத்திற்கு சென்று, மனைவி மற்றும் மகனை மீட்டு தரும்படி மனு அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT