சென்னை,
பத்திர பதிவுத்துறை வரலாற்றில் முதல்முறையாக ஒரேநாளில் 158 சார் பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தவெக அரசு அமைந்தது முதல் அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அவ்வப்போது அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு துறைகளில் அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பத்திர பதிவுத்துறையில் இன்று ஒரேநாளில் 158 சார் பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பத்திர பதிவுத்துறை வரலாற்றில் ஒரேநாளில் 158 சார் பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.