கொடைரோடு,
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகரான லட்சுமணனுக்கும் (55) மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அஜித்திற்கும் (27) இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் முதலில் லட்சுமணின் மகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. அப்போது மகன் தப்பி போலீசில் புகார் அளித்த நிலையில், அவரது தந்தையான லட்சுமணனை அந்த கும்பல் வெட்டிக்கொன்றது.
தப்பியோடிய மீனாட்சிபுரம் அஜித் உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் எஸ்.பி ஜெயக்குமார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.