தமிழக செய்திகள்

கடலூர் இளம்பெண் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்..கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

உல்லாசமாக இருக்கலாம் என்று மஞ்சுளாவை அழைத்தேன். ஆனால் அதற்கு மஞ்சுளா மறுத்து விட்டார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் கண்ணுத்தோப்பு பாலம் உள்ளது. இந்த பாலம் விக்கிரவாண்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் அருகே அதிக அளவில் மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை அந்த இடத்தில் அரை குறையாக புதைக்கப் பட்ட நிலையில் இளம்பெண் உடல் ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் மற் றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெண்ணின் உடலை கைப்பற்றி னர். அப்போது பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் இருந்தது. அவரது கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் வழிந்திருந்தது. அந்த பெண் கழுத்தில் இரட்டை தாலி அணிந்திருந்தார். அவர் 2 நாட்களுக்கு முன்பு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது. தொடர்ந்து பெண்ணின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

பெண்ணின் முகம் சிதைந்த நிலையில், கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அவர் அணிந்திருந்த தாலி செயின் கழுத்திலேயே காணப்பட்டது. உடலில் கற்பழிக்கப்பட்டதற்கான எந்த அடையாளங்களும் தென்படவில்லை.

இதனால் கொலை செய்யப்பட்ட பெண் கணவர் அல்லது கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் உறுதியாக எண்ணினர். இதை தொடர்ந்து முதலில் பெண்ணை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

காலை 8 மணியளவில் பெண் உடல் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது பற்றி அந்த பகுதி முழுவதும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மஞ்சுளா என்பதும், வடலூர் கல்லுக்குழி ஓ.பி.ஆர் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து மஞ்சுளாவின் செல்போன் எண்ணை வைத்து துப்பு துலங்கப்பட்டது. இதில் அவருடன் காணாமல் போன அன்று இரவு நெய்வேலி சேப்ளாநத்தம் காமராஜ் நகரை சேர்ந்த சம்பத் என்பவர் பேசி இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் மஞ்சுளாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மஞ்சுளாவுக்கும் எனக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது என்றும், திருமணம் ஆன என்னை அவள் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி வந்ததால் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொன்றேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பத் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

வடலூர் மேட்டுக்குப்பம் ஆர்ச் அருகே நான் சூப் மற்றும் மீன் வறுவல் கடை நடத்தி வருகிறேன். 3 ஆண்டுகளுக்கு முன்பே அதே பகுதியில் மஞ்சுளா துணிக்கடை நடத்தி வந்தார். அப்போது எங்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அவ்வபோது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருப்போம். இந்தநிலையில், சம்பவத்தன்று சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க சென்ற மஞ்சுளா இரவில் என்னுடன் போனில் பேசினார். பின்னர் கடந்த 27-ம் தேதி இரவு பஸ்சில் வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கூட்டுரோட்டில் இறங்குமாறு கூறினேன்.

உல்லாசமாக இருக்கலாம்

அதன்படி அதிகாலை 3 மணியளவில் பஸ்சில் இருந்து இறங்கிய மஞ்சுளாவை, மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வடலூரை அடுத்து கண்ணுதோப்பு பாலம் அருகே சென்றேன். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். அதிகாலை என்பதால் நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று மஞ்சுளாவை அழைத்தேன். ஆனால் அதற்கு மஞ்சுளா மறுத்து விட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

அப்போது மஞ்சுளா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தினார். அதற்கு நான் மறுத்ததால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியால்,மஞ்சுளாவை கழுத்தை அறுத்து கொன்றேன்.

பின்னர் உடலை தர தரவென்று இழுத்து சென்று மண்ணில் புதைத்து விட்டு அதன் மீது பெரிய அளவிலான கற்களை வைத்து விட்டு எதுவும் தெரியாதது போல் சென்று விட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

துப்பு துலங்கியது எப்படி?

இந்த கொலை வழக்கில் துப்பு துலங்கியது எப்படி என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

காலை 8 மணி அளவில் கொலை செய்யப்பட்ட பெண் உடல் மீட்கப்பட்டது. ஆனால் மாலை 3 மணியளவில்தான் கொலையுண்டது மஞ்சுளா என்பது தெரிய வந்தது.

சென்னையில் கல்லூரியில் படித்து தனது மகளை பார்த்து விட்டு புதன்கிழமை இரவு ஊருக்கு திரும்பியபோதுதான் காணாமல் போய் உள்ளார். அவரது செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினார்கள்.

இதற்கிடையே வடலூர் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட தகவல் மற்றும் அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதை பார்த்து சென்னையில் படித்து வரும் மகள்தான் குடும்பத்தினருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.

போலீசார் தோண்டி எடுத்துள்ள உடல் தனது தாய் போன்று இருப்பதாக கூறி இருக்கிறார்.

இதன் பிறகுதான் குடும்பத்தினர் போலீசாரிடம் சென்று மஞ்சுளா காணாமல் போன விவரத்தை தெரிவித்தனர். இதை தொடர்ந்து மஞ்சுளாவின் குடுமப்த்தினர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை பார்த்து அடையாளம் காட்டினார்.

மீன் வறுவல்

இதன்பிறகு மஞ்சுளா காணாமல் போன அன்று இரவில் யாருடன் பேசிகொண்டிருக்கிறார் என்பதை கண்டுபிடித்த போலீசார் சம்பத்தை தேடி சென்றனர். அப்போது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டம் தூரத்தில் நேற்று மாலை 5 மணி அளவில் கொலை செய்த எந்த பதட்டமுன்றி மீன் வறுவல் செய்து பரபரப்பாக சம்பத் விற்அனை செய்து கொண்டு இருந்தார்.

அவரிடம் சென்று பேச்சு கொடுத்த போலீசார் மீன் வறுவல் 200 கிராம் தருமாறு கேட்டு வங்கினார்கள். பின்னர் நடந்த சம்பவத்தை கூறி அதிரடியாக அவரை கைது செய்தனர்.

மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த ஒரு செயினை மட்டும் சம்பத் எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார்.

அவரது வீட்டில் இருந்த நகையையும் போலீசார் மீட்டனர். கடற்கரை ஓரமாக வீசப்பட்ட மஞ்சுளாவின் கைப்பை செல்போன் ஆகியவற்றையும் இந்த வழக்கில் முக்கிய ஆதாராங்களாக திரட்டினர்.

மஞ்சுளாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற வீடியோ காட்சிகளும் சிக்கி உள்ளன. இதன்மூலம் இந்த கொலை வழக்கில் கொலையாளி சம்பவத்துக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுப்போம் என்று போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட அடையாளம் காணப்பட்ட 2 மணி நேரத்தில் கடலூர் போலீஸ் சூப்ப்ரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தீவிரமாக துப்பி துலங்கி கொலையாளியை கைது செய்துள்ளனர்.

கொலை வழக்கில் சம்பத்துக்கும் திருமணம் ஆகி குழந்தை உள்ளது. கள்ளக்காதல் விவகாரம் காரணமாக 2 குடும்பங்கள் நிலைகுலைந்து தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.