தமிழக செய்திகள்

எனக்கு 8 முறை நோபல் பரிசு கிடைத்து இருக்க வேண்டும் - டிரம்ப் ஆதங்கம்

எனக்கு நோபால் பரிசு வழங்காதது நார்வே நாட்டிற்கும் நோபல் பரிசு கமிட்டிக்கும் ஏற்பட்ட அழியாக கறை என டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்

அமைதிக்கான நோபல் பரிசை 8 முறை பெற்றிருக்க வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், பொருளா​தா​ரம் மற்​றும் உலக அமை​திக்​காக பாடுபட்டோருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2026-ம் ஆண்​டுக்​கான நோபல் பரிசுகளை பெறுபவர்​களின் பெயர்​கள் அறிவிக்​கப்​பட்டு வருகின்றன.

நேற்று 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவில் பிறந்த தமிழ் வம்சாவளி குடும்பத்தைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்தியா - பாகிஸ்தான் உள்பட உலகில் பல்வேறு போர்களை நிறுத்தியதாகவும் அதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்தநிலையில், வாஷ்ங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் பேசியதாவது:

உங்கள் (அமெரிக்க மக்கள்) அதிபராகிய எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. இது நார்வே நாட்டுக்கும் நோபல் பரிசு கமிட்டிக்கும் ஏற்பட்ட அழியாத கறை. இந்தப் பரிசு வழங்கப்படாததை நாங்கள் (அமெரிக்கா) எப்போதும் மறக்கமாட்டோம். ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும், இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நானும் அந்த நபரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை, இருப்பினும் வாழ்த்துகள்.

நான் தீர்த்து வைத்த ஒவ்வொரு போருக்கும், அமைதிக்கான நோபல் பரிசை 8 முறை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்தப் பரிசை நார்வே எனக்கு வழங்கவில்லை என்று ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT