சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சேலம் அருகே அரியானூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, தடுப்பைத் தாண்டி சரக்கு வாகனத்தில் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
தங்கள் ஊழல் கஜானாவை எப்படியாவது நிரப்பிட வேண்டும் என்ற ஒரே நோக்கில் அப்பாவிப் பொது மக்களின் உயிர்களை அடமானம் வைக்கத் துடிக்கும் திமுக போன்ற ஒரு தீயசக்தியைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள், இனி அரியணையில் ஏறவும் அனுமதிக்க மாட்டார்கள்!என தெரிவித்துள்ளார்.