சென்னை,
சென்னை தியாகராய நகரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆயுதப்படை எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. சேகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.