தமிழக செய்திகள்

அரசு வேலை கிடைக்காததால் சித்தா பெண் டாக்டர் தற்கொலை

அரசு வேலை கிடைக்காததால் சித்தா பெண் டாக்டர் தற்கொலை.

தென்காசி,

தென்காசி மாவட்டம் வடக்கு பூலாங்குளத்தை சேர்ந்தவர் மோசஸ் சுந்தர் சிங். இவருடைய மகள் லில்லி ரோஸி (வயது 26).

பி.எஸ்.எம்.எஸ். என்ற சித்த மருத்துவ படிப்பை முடித்துள்ளார். சித்தா டாக்டரான இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். சில ஆண்டுகளாகவே இவ்வாறு முயற்சி செய்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அரசு வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT