சென்னை,
சென்னையின் இயற்கை அரணாகவும், உயிர்நாடியாகவும் விளங்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் நோக்கில், ‘பசுமை தாயகம்’ அமைப்பின் சார்பில் புதிய மக்கள் பரப்புரை மற்றும் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படுகிறது.
சென்னை தியாகராயர் நகர், பாண்டி பஜார் ரத்னா ஸ்டோர்ஸ் அருகில் நாளை காலை 10.00 மணிக்கு இந்த பரப்புரையின் தொடக்க நிகழ்வு நடைபெறுகிறது.
சென்னையின் உயிர்நாடி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பதற்கான மக்கள் இயக்கம்" என்ற பெயரில் நடைபெறும் இந்த மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தை பா.ம.க. தலைவரும், பசுமை தாயகம் அமைப்பின் ஆலோசகருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேரில் கலந்துகொண்டு முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, பிரபல நீரியல் வல்லுநர் எஸ். ஜனகராஜன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ. சுந்தர்ராஜன் உள்ளிட்ட முக்கிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆளுமைகளும், சமூக ஆர்வலர்களும் பெருந்திரளாக பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.