தமிழக செய்திகள்

சிக்ரி நிறுவன நாள் விழா

சிக்ரி நிறுவன நாள் விழா நடைபெற்றது

காரைக்குடி

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (சிக்ரி) 76-வது ஆண்டு நிறுவன நாள் விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சிக்ரி இயக்குனர் ரமேஷா தலைமை தாங்கினார்..மூத்த விஞ்ஞானி சிவ சண்முகம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக சி.எஸ்.ஐ.ஆர். தலைமை இயக்குனர் கலைச்செல்வி, மத்திய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறை அமைச்சக செயலாளர் பூபேந்தர்சிங் பெல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் புதிதாக கட்டப்பட்ட பசுமை ஹைட்ரஜன் ஆய்வகம் எலக்ட்ரோ பிளேட்டிங் ஆய்வகம் மற்றும் கிளைமேட் ஆக்சன் ஆய்வகம் ஆகியவற்றை தலைமை இயக்குனர் கலைச்செல்வி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் பூபேந்தர்சிங் பெல்லா ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் ஸ்ரீராம், கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் ஆனந்தபல்லி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முடிவில் சிக்ரி நிர்வாக அதிகாரி ஷியாம் சுந்தர் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT