தமிழக செய்திகள்

சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் பிறந்தநாள் - அண்ணாமலை புகழாரம்

வரலாற்றில் முதன்முறையாக சிலப்பதிகார மாநாட்டை நடத்தி, 'சிலம்புச் செல்வர்' என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றவர்.

சென்னை,

வீ த லீடர்ஸ் (We The Leaders) இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சிறந்த தமிழறிஞரும், எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான, ஐயா ம.பொ.சி. அவர்களின் பிறந்த தினம் இன்று.

சிலம்புச் செல்வர்

மொழிவாரி மாநில மறுசீரமைப்பின்போது, சென்னை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்தின் அங்கமாகத் திகழ, முக்கியப் பங்காற்றியவர். வரலாற்றில் முதன்முறையாக சிலப்பதிகார மாநாட்டை நடத்தி, 'சிலம்புச் செல்வர்' என்ற சிறப்புப் பட்டத்தை பெற்றவர்.

தமிழும் தமிழர் பண்பாடும் நிலைத்திருக்கும் வரை, ஐயா ம.பொ.சி. அவர்களின் புகழும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.