தமிழக செய்திகள்

குழந்தைகளை வைத்து யாசகம்... வடமாநிலத்தவர்களை பிடித்து மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்த சிங்கப்பெண் படை

காவலர்களை வடமாநிலத்தவர்கள் தள்ளிவிட்டு தப்பியோட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு,

வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக யாசகம் பெற்று வந்த, வடமாநிலத்தை சேர்ந்தவர்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே, வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக காலை மற்றும் மாலை வேளைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு, வட மாநிலத்தவர்கள் யாசகம் பெற்று வருவதாகப் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள், அந்த வடமாநிலத்தவர்களை எச்சரித்து, செங்கல்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப முயன்றனர். அப்போது கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள், காவலர்களை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும், கிளாம்பாக்கம் போலீசார் மற்றும் பொதுமக்களின் உதவியோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பெண் காவலர்கள் பத்திரமாக வேனில் ஏற்றி செங்கல்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். சிங்கப்பெண் சிறப்பு படையினரின் துணிச்சலான செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

SCROLL FOR NEXT