சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த படைக்கு 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' என்ற பெயரை ஐ.ஜி. பவானீஸ்வரிதான் சிபாரிசு செய்துள்ளார். அவருடைய சிபாரிசை ஏற்று, முதல்-அமைச்சர் விஜய் இந்த பெயரை சூட்டியதோடு மட்டுமல்லாமல், பவானீஸ்வரியை இந்த படைக்கு ஐ.ஜி.யாகவும் நியமித்துள்ளார்.
இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தொடக்க விழா வருகிற 27-ந்தேதியன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த அதிரடிப்படையின் ரோந்து பணிக்காக 30 ரோந்து வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், முதல்-அமைச்சர் விஜய் கலந்துகொள்கிறார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அவர் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர், போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று மாலை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கிற்கு சென்று, விழாவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு முக்கிய ஆலோசனையும் வழங்கினார்கள்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ரீட்டாவின் மகன் ரோஹித் என்பதில் திருப்தி அடைகிறேன். தாய்மையை நிரூபிக்க மரபணு சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனால், ஒரு வாரத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.