சென்னை,
தமிழ்நாட்டை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான மாநிலமாக உருவாக்கும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சரால் 09.06.2026 அன்று சிங்கப்பெண் சிறப்புப் அதிரடிப்படை தொடங்கி வைக்கப்பட்டது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலை 4.00 மணி அளவில் தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டம் காவல்துறை தலைவர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 35 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் 51 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கருத்துகள் தகவல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வை மேம்படுத்துவதில் அவர்களுடனான அவர்களின் பங்களிப்பை பெறுவதும் அவர்களுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதும் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
கூட்டத்தின்போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சேவைகள், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து செயல்படும் வழிமுறைகள் தொடர்பாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களது அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொண்டனர்.
காவல்துறை தலைவர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதில் காவல்துறைக்கும் அரசுசாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் அவசியமானது என்பதை வலியுறுத்தினார்கள். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளை திறம்பட எதிர்கொள்வதற்கு தொடர்ச்சியான தகவல் பரிமாற்றம், ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவமும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) ஆர்வமுடன் பங்கேற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தங்களது கள அனுபவங்கள். நடைமுறை சவால்கள் மற்றும் பயனுள்ள பரிந்துரைகளை பகிர்ந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொதுமக்களிடையே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும். பாதிக்கப்பட்டோருக்கான உடனடி மீட்பு, பாதுகாப்பு மற்றும் ஆதரவு நடவடிக்கைகளை சிறப்பு அதிரடிப்படை அரசுசாரா வறுப்படுத்தவும். தொண்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தடுப்பு, பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை வலுப்படுத்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் செயல்படுவதில் உறுதியுடன் இருப்பதாக இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.