கொம்பேறிமூக்கன் வகைப் பாம்பு 
தமிழக செய்திகள்

சிவகங்கை: சமையலறையில் பதுங்கியிருந்த 4 அடி நீள கொம்பேறிமூக்கன் பாம்பு மீட்பு

மீட்கப்பட்ட பாம்பை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் சமையலறையில் பதுங்கியிருந்த 4 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

சமையலறையில் புகுந்த பாம்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (சனிக்கிழமை) வழக்கம்போல் வீட்டார் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது சமையலறைப் பகுதியில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து பார்த்தபோது, அங்கு சுமார் 4 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் வகைப் பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்

இது குறித்து உடனடியாக சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

லாவகமாக மீட்பு

சமையலறைப் பொருட்களுக்கு இடையே பதுங்கியிருந்த அந்த பாம்பை, தீயணைப்பு வீரர்கள் எவ்வித காயமும் ஏற்படாமல் நவீன உபகரணங்களின் உதவியுடன் மிக லாவகமாகப் பிடித்தனர். மீட்கப்பட்ட பாம்பை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வீட்டிற்குள் புகுந்த பாம்பு உடனடியாக மீட்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT