தமிழக செய்திகள்

சிவகாசி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் பலி

வெடி விபத்தில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், அம்மாவட்டத்தின் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பெண்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.