திண்டுக்கல்,
ஒட்டன்சத்திரம் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காந்தி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 100-ஐ தாண்டியது. சில வாரங்களாக சின்ன வெங்காயம் கிலோ ரூ. 130-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சில்லறை விலையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழையில்லாததால் சாகுபடி குறைந்துள்ளது. இதனால் வரத்து குறைந்துள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை கூடியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.