தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்க்கு காது கேட்கும் கருவி அனுப்பிய சமூக ஆர்வலர்

முதல்-அமைச்சர் விஜய் மக்களின் பிரச்சினைகளுக்கு செவி சாய்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி என்பவர், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் முதல்-அமைச்சர் விஜய்க்கு காது கேட்கும் கருவியையும், ஒரு கடிதத்தையும் தபால் மூலம் அனுப்பினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்களுக்கு குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது முதல்-அமைச்சரான பிறகு குழந்தைகள், பெண்கள் மற்றும் பெற்றோரின் வேதனை குரல்கள் கூட அவருக்கு கேட்பதில்லை.

இதனால் முதல்-அமைச்சர் விஜய்க்கு காது கேட்கும் கருவி அனுப்பப்பட்டுள்ளது. அவர் மக்களின் பிரச்சினைகளுக்கு செவி சாய்த்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT