சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில், மிகவும் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய கல்வித் துறையில் அரசியல் கண்ணோட்டமின்றி, மக்கள் நலக் கண்ணோட்டமே மேலோங்கி இருக்க வேண்டும்.
'உலகமே பாராட்டி வியந்த காலை உணவுத் திட்டத்தைத் தொடருவோம்' என்ற அறிவிப்பு சரியான நிலைப்பாடு. ஆட்சி மாறினாலும் முந்தைய அரசின் இதுபோன்ற திட்டங்கள் அனைத்தையும், புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளவர்கள் தொடருவது மிகவும் தேவையானது. சமூகநீதித் திட்டங்களும் இதுபோல தொடர வேண்டியது முக்கியம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.