தமிழக செய்திகள்

சிவகளையில் விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

சிவகளை பகுதியில் நடந்த மண்வள மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சியில் ஸ்ரீவைகுண்டம், சிவகளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் விவசாயிகளுக்கு மண்வள மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

சிவகளையில் விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி

தூத்துக்குடி மாவட்டம், சிவகளை பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வனஜாதேவி தலைமை தாங்கினார். ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி பழனிசாமி முன்னிலை வகித்தார். பயிற்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் முத்துக்குமார், மாசான செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மண்வள மேலாண்மையின் முக்கியத்துவம், மண்ணின் தன்மையை அறிந்து அதற்கேற்ப பயிர் சாகுபடி மேற்கொள்ளுதல், மண்ணின் வளத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் மண் வளத்தை மேம்படுத்துவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து உரமிடுதல், இயற்கை உரங்கள் மற்றும் உரங்களைப் பயன்படுத்துதல், மண்ணின் உயிரியல் தன்மையைப் பாதுகாத்தல், சாகுபடி செலவுகளைக் குறைத்து அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதில் ஸ்ரீவைகுண்டம், சிவகளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் வட்டார தொழில் நுட்ப மேலாளர் இசக்கிராணி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆனந்தி. தனலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT