தமிழக செய்திகள்

சில எதிர்க்கட்சிகள் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க திட்டம்; துரை வைகோ

சிறுபான்மையினருக்கும் இந்த மறுவரையறையினால் ஆபத்து வரும். அதற்கு அசாம் உதாரணம் என்று துரை வைகோ கூறினார்.

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மதிமுக எம்பி துரைவைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:

39 எம்.பி.க்களை வைத்துக் கொண்டே நமது உரிமைகளை பேச முடியவில்லை. ஏற்கனவே உள்ள எண்ணிக்கை தொடர வேண்டும் என்பதுதான் இந்த கூட்டத்தின் முடிவு. சில எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. இப்போதுள்ள நிலைப்பாடுதான் தொடர வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.

சிறுபான்மையினருக்கும் இந்த மறுவரையறையினால் ஆபத்து வரும். அதற்கு அசாம் உதாரணம். அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்ற முனைப்பு காட்டுகின்றனர். இதில் பா.ஜனதாவின் கருத்தைதான் தி.மு.க. கூறி வருகிறது. சமூகவலைதளத்தில் அதை காண முடிகிறது. 50 சதவீத உயர்வு ஏற்கக்கூடியதுதான் என்று கருத்து கூறி வருகின்றனர். மறுவரையறைக்கான ஆணையம் அமைத்துவிட்டால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நினைத்ததை செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினர்.