தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக, தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்ததை அடுத்து, இன்று தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.
மேலும், அவருடன் தவெகவைச் சார்ந்த செங்கோட்டையன் உள்பட 9 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய செங்கோட்டையன் கூறியதாவது: “நம்முடைய முதல் அமைச்சரோடு இன்று பதவிப் பிரமாணம் செய்தது என் வாழ்நாளில் நினைத்துப் பார்க்காத ஒன்றாக இருக்கிறது.
ஆகவே, இது இமாலய வெற்றி என்றுதான் கருதுகிறேன். அவருடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் நான் கூர்ந்து கவனித்தேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் பயணம் செய்திருக்கிறேன். முதல் அமைச்சர் விஜய்யோடு பயணிக்கும் போதும் அதேமாதிரி உணர்கிறேன்.இந்த அரசுக்கு என் உயிர்மூச்சுள்ள வரை, உறுதுணையாக இருப்பேன்”என்றார்.