சென்னை,
சட்டமன்ற பா.ம.க. குழு தலைவராக சவுமியா அன்புமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான கடிதத்தை சட்டசபை செயலாளர் கே.சீனிவாசனுக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் 11-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற பா.ம.க. குழு தலைவராக தர்மபுரி தொகுதி எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.துணை தலைவராக செஞ்சி எம்.எல்.ஏ. கணேஷ்குமார், கொறடாவாக விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.