கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ராயல் சொசைட்டியின் உறுப்பினராக சவுமியா சுவாமிநாதன் தேர்வு - டிடிவி தினகரன் வாழ்த்து

ராயல்டி சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்வாகியிருக்கும் சவுமியா சுவாமிநாதனுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வேளாண்மை விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளும், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியுமான சவுமியா சுவாமிநாதன் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள டாக்டர் சவுமியா சுவாமிநாதனுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலகின் பழமையான அறிவியல் அகாடமிகளில் ஒன்றான பிரிட்டன் ராயல்டி சொசைட்டி அமைப்பின் உறுப்பினராகத் தேர்வாகியிருக்கும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் புதல்வி விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவியல், சுகாதாரம் மற்றும் உலகளாவிய நெருக்கடி மேலாண்மை ஆகியவற்றைத் திறம்படக் கையாண்டு பொது சுகாதாரத்துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் ராயல் சொசைட்டி அமைப்பின் மூலம் மேன்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.