தமிழக செய்திகள்

நெல்லையில் இருந்து சென்னைக்கு 20-ம் தேதி சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை, தசரா விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டதாவது:-

வண்டி எண் 06146 நெல்லையில் இருந்து அக்டோபர் 20 ஆம் தேதி இரவு 11.40 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் வழியாக மதுரைக்கு நள்ளிரவு 1.55 மணிக்கு வந்து சேரும். மதுரையில் இருந்து நள்ளிரவு 2.05 மணிக்கு புறப்படும் ரெயில் திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு அதிகாலை 4.20 மணிக்கு சென்றடையும்.

திருச்சியில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் ரெயில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு புதன் கிழமை(அக்.21) காலை 10.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

SCROLL FOR NEXT