சென்னை,
கடந்த (2025-26) நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் சிறப்பு ரெயில்களை இயக்கி தெற்கு ரெயில்வே சாதனை படைத்துள்ளது. மொத்தம் 229 சிறப்பு ரெயில்கள் 2,513 முறை இயக்கப்பட்டுள்ளன. இதுதவிர, முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் 1,762 முறை இயக்கப்பட்டுள்ளன.
சிறப்பு ரெயில்களில் மொத்தம் 32 லட்சத்து 98 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் தெற்கு ரெயில்வேக்கு ரூ.243 கோடியே 22 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. சராசரியாக ஒரு சிறப்பு ரெயிலில் 1,312 பேர் பயணம் செய்துள்ளனர். இது அகில இந்திய சராசரியான 894 என்பதைவிட மிகவும் அதிகமாகும். இதன் மூலம் இந்திய அளவில் முதன்மை மண்டலமாக தெற்கு ரெயில்வே உயர்ந்து சாதனை படைத்துள்ளது.