டிக்கெட்டு 
தமிழக செய்திகள்

டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினை: தீர்வு காண தெற்கு ரெயில்வே கடிதம்

டிக்கெட் அச்சிடும் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்த வேண்டும் என்றும் தெற்கு ரெயில்வே தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சென்னை,

டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினை: தீர்வு காண தெற்கு ரெயில்வே கடிதம். மெலும் டிக்கெட் மை அழிந்து போவதால் டிக்கெட் பரிசோதகர், பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்படுவதால், பிரிண்டர்களின் திறனை மேம்படுத்த தெற்கு ரெயில்வே வலியுறுத்தல்

டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினை

ரெயில் டிக்கெட்டுகளில் அச்சிடப்படும் மை மிக விரைவாக அழிந்து போவதால் பயணிகளுக்கும், டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த முக்கிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரி, தெற்கு ரெயில்வே தரப்பில் இந்திய ரெயில்வே வாரியத்திற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

பயணிகள் - டி.டி.ஆர் இடையே மோதல்

தற்போது ரெயில் நிலைய கவுண்டர்களில் வழங்கப்படும் கணினிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டுகளில் பயன்படுத்தப்படும் மையின் தரம் குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. டிக்கெட் வாங்கிய சில மணி நேரங்களிலேயே அல்லது பாக்கெட்டில் வைத்திருக்கும் போது, அதில் உள்ள ரெயில் எண், பயண தேதி மற்றும் இருக்கை எண்கள் போன்ற முக்கிய விவரங்கள் முற்றிலும் அழிந்து விடுகின்றன.

இதனால், ரெயிலில் டிக்கெட் பரிசோதனை செய்யும் போது, பயணிகளுக்கும் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்களும் தேவையற்ற மன உளைச்சல்களும் ஏற்பட்டு வருகின்றன.

பிரிண்டர்களின் திறனை மேம்படுத்த வலியுறுத்தல்

இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் தற்போது களமிறங்கியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ரெயில் நிலையங்களில் டிக்கெட் அச்சிட பயன்படுத்தப்படும் பிரிண்டர்களின் திறனை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நிரந்தர தீர்வு

தரமான மைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், டிக்கெட் அச்சிடும் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்த வேண்டும் என்றும் தெற்கு ரெயில்வே தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. தெற்கு ரெயில்வேயின் இந்த நடவடிக்கையால், விரைவில் ரெயில் டிக்கெட்டுகளில் மை அழியும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.