தமிழக செய்திகள்

தென் மண்டல விமான நிலைய ஆணையகம்: புதிய நிர்வாக இயக்குனராக வி.முருகானந்தம் பொறுப்பேற்பு

அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மீனம்பாக்கம்,

தென்னிந்திய விமான நிலைய ஆணையகத்தின் தென் மண்டல நிர்வாக இயக்குனராக வி.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா. கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 30-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டு பணிகளை இந்த மண்டல அலுவலகம் நிர்வகித்து வருகிறது.

பொறுப்பேற்பு

இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தென் மண்டல விமான நிலைய ஆணையக அலுவலகத்தில் வி.முருகானந்தம் நேற்று நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பொறுப்பேற்ற பிறகு முருகானந்தம் கூறும்போது, “அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். விமான நிலைய செயல்பாடுகள் மற்றும் வான்வழி சேவைகள் மேலும் மேம்படுத்தப்படும்" என்றார்.