தமிழக செய்திகள்

நாளை மறுநாள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு..!

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட தாமதமாக தொடங்குகிறது.

சென்னை,

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மே மாதம் மூன்றாவது வாரத் தொடக்கத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. பல்வேறு இடங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கேரள, தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 4-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை

இதன்படி ஜூன் 4-ம் தேதி கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்த வருடம் தென் தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பருவமழை

அதன்படி, நாளை மறுநாள் (வியாழன்) தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகள், கேரளாவில் பருவமழை தொடங்குகிறது. மத்திய கிழக்கு, வடகிழக்கு, மத்திய மேற்குப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்னேறுவதற்கான சூழல் நிலவி வருகின்றது. நடப்பாண்டில் இயல்பை விட தாமதமாக தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.