தமிழக செய்திகள்

விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் சேமங்கி, மரவாபாளையம், புன்னம்சத்திரம், திருக்காடுதுறை, புகழூர், தவுட்டுப்பாளையம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT