தமிழக செய்திகள்

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் மலையை சுற்றியுள்ள கிரிவல பாதையை பக்தர்கள் சுற்றிவந்து பாலாலயம் செய்யப்பட்டு எடுத்து வைக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு சென்றனர். இதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT