தமிழக செய்திகள்

வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகளை காக்க வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

பறவைகளின் கூண்டுகளில் குளிர்ச்சியான சூழலை உருவாக்க 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பீச்சி அடிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், வெயிலின் தாக்கத்தில் இருந்து விலங்குகள் மற்றும் பறவைகளை காக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வண்டலூர் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவில், 2,000-க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பறவைகளின் கூண்டுகளில் குளிர்ச்சியான சூழலை உருவாக்க 2 மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பீச்சி அடிக்கப்படுகிறது.

குரங்குகளுக்கு ஷவர் முறையில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பாம்புகளுக்கு சொட்டுநீர் பாசன முறையில் ஈரப்பதம் பராமரிக்கப்படுகிறது. மேலும், பார்வையாளர்கள் நடந்து செல்லும் பாதைகளில் ஸ்ப்ரே மூலம் தண்ணீர் தெளித்து குளிர்ச்சியான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.