கோவை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை – மனிதநேயமற்ற மிருகங்கள் மீது சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் வீசப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன.
எனவே,கொடூரமான முறையில் சிறுமியைக் கொலை செய்த மனிதநேயமற்ற மிருகங்களைக் கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.