தமிழக செய்திகள்

சிறைத்துறையில் பணியிட மாற்றத்துக்கு சிறப்பு வாரியம்: டிஜிபி நடவடிக்கை

சிறைத்துறை ஐ.ஜி. தலைமையில் 4 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சிறைத்துறை பணியாளர்கள் பணியிட மாற்றம், புதிய பணி நியமனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் வகையில் புதிய சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இதற்காக புதிய வாரியத்தை சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் அமைத்துள்ளார். இதற்காக சிறைத்துறை ஐ.ஜி. தலைமையில் 4 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

2 மாதங்க ளுக்கு ஒருமுறை இந்த குழு கூட உள்ளது. இதன் மூலம், பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களில் தெளிவான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு சிறைத்துறை பணியாளர்களிடையே உருவாகி உள்ளது. சிறைத்துறையில் பணியிட மாற்றங்கள் தொடர்பாக எழும் நிர்வாக சிக்கல்கள், பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் சேவைத் தேவைகளை ஒருங்கிணைத்து தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.