சிறப்பு பஸ்கள்
ஆயுத பூஜை விழா மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்களின் வசதிக்காக வருகிற 20, 21, 22-ந் தேதி ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சீபுரம், திருப்பதி ஆகிய இடங்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக 20-ந் தேதியன்று 200 சிறப்பு பஸ்கள், 21-ந் தேதி 250 சிறப்பு பஸ்கள், 22-ந் தேதி 200 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் விடுமுறையை முடித்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக கூடுதலாக 24-ந் தேதியன்று 200 சிறப்பு பஸ்களும், 25-ந் தேதி 150 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
தேவைக்கேற்ப
மேலும் பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவல் அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.