தமிழக செய்திகள்

தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கம்

இன்றும், நாளையும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

வார விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் இன்றில் இருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் பஸ்கள், அனைத்து ரெயில்கள் என அனைத்தும் நிரம்பி வழிகின்றன. வெளியூர் செல்லும் பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லவும், கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படுகின்ற 2 மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மாலை 6.4 4 மணிக்கு புறப்படும் இந்த மின்சார ரெயில் தாம்பரத்திற்கு 7.44 மணிக்கு சென்று கூடுவாஞ்சேரிக்கு 8.10 மணிக்கு சென்றடைகிறது. இதே போல இரவு 7.10 மணிக்கு கடற்கரையில் புறப்பட்டு 8.10 மணிக்கு தாம்பரம் வந்து 8.30 மணிக்கு கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு ரெயில் சென்றடைகிறது.

மேலும் தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே 2 பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கூடுவாஞ்சேரியில் இரவு 8.18 மணிக்கு புறப்பட்டு இரவு 8.40 மணிக்கு தாம்பரம் வந்து சேர்கிறது. மற்றொரு சிறப்பு ரெயில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு 9.10 மணிக்கு தாம்பரம் வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT