தமிழக செய்திகள்

சிறுபான்மையினரை காக்க சிறப்பு சட்டம்: தேர்தல் அறிக்கை வெளியிட்டார் விசிக தலைவர் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-

* சிறுபான்மையினரை காக்க சிறப்பு சட்டம்

* ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றுதல்

* மருத்துவத்தை அடிப்படை உரிமையாக மாற்றுதல்

* தனியார் துறையிலும் இடஒதுக்கீடு மூலம் சமூகநீதியை உறுதி செய்தல்

* மது மற்றும் போதைப்பொருட்களை முழுமையாக ஒழித்தல்

* இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுதல்

* இருமொழி கொள்கையை உறுதிப்படுத்துதல்

* கடல், காடு, கனிம வளங்கள் அனைத்தும் மக்களுக்கே உரியவை என்ற கொள்கை

* விலையில்லா கல்வி

* மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீடு

* மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு

* உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம்

* காவல்துறை மற்றும் சிறைத்துறையில் சீர்திருத்தம்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.