சென்னை,
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் பதவி ஏற்ற பின்பு ரவுடிகள் மற்றும் போதை பொருள் தடுப்பு சம்பவங்கள் தொடர்பாக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில விபத்துகளையும் போக்குவரத்துகளையும் சரி செய்வதற்காக சென்னை மாநகரில் பாதுகாப்பான மற்றும் விபத்தில்லா வாகன போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில் ஆணையர் உத்தரவின் பெயரில் ஜூன் 6-ந்தேதி மற்றும் 7-ந்தேதி இரவு நேர சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் மாநகரம் முழுவதும் 350 போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட்டனர்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் அதிவேகமாக ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீரல்களை தடுக்கவும், நகரின் முக்கிய பகுதிகளில் 120 வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இந்த சோதனையானது கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதில் 1,933 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 224 வழக்குகளும், அதிவேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 101 வழக்குகளும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக, 1,558 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்து பாதுகாப்பான சாலை பயணத்திற்கு ஒத்துவைக்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வேண்டுகொள் அனுதிவிடுக்கப்பட்டிருக்கிறது.