தமிழக செய்திகள்

சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் காவிலில் சிவராத்திரியையொட்டி சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை பாருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில், நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரன் கோவில் மற்றும் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT