தமிழக செய்திகள்

சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போல நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மேலும் திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கட ஹர மங்களமாருதி ஆஞ்சநேயர், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடந்தது. 

SCROLL FOR NEXT