சிறப்பு ரெயில் 
தமிழக செய்திகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் அறிவிப்பு

சென்னை தாம்பரம் - மேற்கு வங்கத்திலுள்ள சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

பண்டிகை காலத்தை முன்னிட்டு, சென்னை தாம்பரம் - மேற்கு வங்கத்திலுள்ள சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பண்டிகை காலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

தாம்பரம்

ரெயில் எண். 06075 தாம்பரம் - சந்திரகாச்சி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 13, 20 மற்றும் 27 அக்டோபர், 2026 (செவ்வாய்கிழமை) இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் 18.30 மணிக்கு மேற்கு வங்கத்திலுள்ள சந்திரகாச்சியை சென்றடையும் (3 சேவைகள்).

மறுமார்க்கம்

மறுமார்க்கத்தில், ரெயில் எண். 06076 மேற்கு வங்கத்தில் சந்திரகாச்சி - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் 2026 அக்டோபர் 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சந்திரகாச்சியில் இருந்து 21.30 மணிக்குப் புறப்பட்டு மூன்றாம் நாள் (3 சேவைகள்) 10.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

மேற்கூறிய சிறப்பு ரெயில்கான முன்பதிவு, தெற்கு ரெயில்வே தரப்பில் நாளை காலை 08.00 மணிக்கு தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT